7வது ஊதியக் குழு பரிந்துரைகள் இன்று சமர்ப்பிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.

இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. மத்திய அரசு பணியாளர்களின் ஊதியத்தை 22 முதல் 23 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகித உயர்வும், பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டவற்றில் ஏழு முதல் 8 சதவிகித உயர்வும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @